Tamil Translation: The Assassination of Patrice Lumumba
- Details
- Category: History
- Created on Tuesday, 22 February 2011 12:49
- Written by Mike Ely
Mike Ely's article "50 Years Ago: The Assassination of Patrice Lumumba" is available here in the Tamil language -- spoken by the Tamil people of Sri Lanka and southern India. Thanks to Porattamtn for the translation.
* * * * * * * *
கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!
மகிழ்ச்சி என்றால் போராட்டம்
லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!
குறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் காங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, காங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற கூலிப்படைகள் என நீள்கிறது. ஐம்பதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால், ஆப்பிரிக்காவில் லுமூம்பாவை நினைவு கூறுவோரின் நம்பிக்கை தொலைத்த விழிகளில், இழப்பின் துயரத்தையும், ஆத்திரத்தையும் நாம் இன்றும் காணலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு மைக் ஈலி என்பவர் எழுதியதும், தற்பொழுது கசாமா எனும் இணைய தளத்தில் அவரால் திருத்தி எழுதப்பட்டு வெளியிடப்பட்டதுமான கட்டுரை கீழே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பதிவை PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்யவும், அச்சிடவும்: http://bit.ly/hJW1IZ
…
பத்ரீஸ் லுமும்பா: காங்கோ எழுச்சியும், படுகொலையும்!
மைக் ஈலி
1960, ஜூலை 30- ஆம் நாள், உலகம் முழுவதும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி வந்த கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும் நாளாகவிருந்தது. ‘பெல்ஜியன் காங்கோவின்’ மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுத்த பெல்ஜிய காலனியாதிக்கவாதிகள், தாது வளம் நிறைந்த மண்ணை விட்டு வெளியேறவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். காங்கோ எனும் குடியரசு மலர்நதது, அதன் தலைவர்களில் ஒருவர்தான் பத்ரீஸ் லுமும்பா! காலனிய எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த, துடிப்பு மிக்க இளம் அரசியல்வாதி.
லியோபோல்ட்வில்லே-யில்(இன்றைய கின்ஷாசா) நடைபெற்ற விழாவில், பெல்ஜியாவின் அரசன் ஒன்றாம் பதோயின் நேரடியாக கலந்து கொண்டு காங்கோ சுதந்திரம் பெற்று விட்டதை அறிவிக்க வந்திருந்தான். அவ்விழாவில், காலனியாதிக்கவாதிகளும், அடிமைப்பட்டவர்களும் தமக்குள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, முன்பு போலவே எதுவும் மாறாமல் தொடரும் நோக்கத்துடன், பரஸ்பரம் ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெல்ஜிய அரசர் திமிரோடு தமது உரையில் கூறினார்: “கனவான்களே, நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்கள் என நிரூபிப்பது இனி உங்கள் பொறுப்பு! “
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லுமும்பா மேடைக்கு வந்து பேசத் துவங்கியவுடன்தான், அரங்கில் அமர்ந்திருந்த காங்கோ மக்கள் எழுச்சியும், உற்சாகமும் கொள்ளத் துவங்கினர். அவரது ஆற்றொழுக்கான உரை வானொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. பெல்ஜியர்களின் கீழ் மக்கள் அனுபவித்த இன்னல்களையும், எதிர்காலத்திற்கான தமது எண்ணங்களையும் லுமும்பா எடுத்துரைத்தார். பெல்ஜிய அரசர் பேயறைந்தது போல உறைந்து போனார்.
லுமும்பா கூறினார்:
Comments (2)
-
Guest (Green Red)
PermalinkVery good job Tamil speaking friends who made such inspiring work
The more people can read good articles of this or other great sites, the closer victory of revolutions will come around!
Long live revolution of India!
Justice for second class / mistreated Tamils of Ceylon who were imported by imperialists to build for their interest!
Long live Ceylon Maoists whose line is brighter and shinier than solely nationalist lines of other groups such as late martyred but courageous Tamil Tigers!0 Like



Dig in.